என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தூதர் மாதுரி குப்தா
நீங்கள் தேடியது "தூதர் மாதுரி குப்தா"
பாகிஸ்தானின் உளவு அமைப்பிற்காக உளவு பார்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் தூதரக அதிகாரி மாதுரி குப்தா குற்றவாளி என டெல்லி கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. #ExDiplomat #MadhuriGupta #IndiaSpying #ISI
புதுடெல்லி:
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றியவர் மாதுரி குப்தா. இவர் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததால் கடந்த 2010ம் ஆண்டு டெல்லி சிறப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தகவல்களை அனுப்பியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஐ.எஸ்.ஐ. அமைப்பைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கு டெல்லியில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மாதுரி குப்தா மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால், அவர் குற்றவாளி என நீதிபதி சித்தார்த் சர்மா தீர்ப்பு வழங்கினார்.
தண்டனை தொடர்பான வாதங்கள் நாளை நடைபெற உள்ளது. அதன்பின்னர் மாதுரி குப்தாவுக்கான தண்டனை அறிவிக்கப்படும். #ExDiplomat #MadhuriGupta #IndiaSpying #ISI
×

X